
Saturday, October 16, 2010
வீட்டுக்கு வர மறுப்பு... ரம்லத்தைப் பிரிகிறார் பிரபு தேவா
நயன்தாராவை திருமணம் என்ற நோக்கத்தில், முதல் மனைவி ரம்லத்தைப் பிரிய முடிவெடுத்த பிரபு தேவா, இனி வீட்டுக்கு வர மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
ரம்லத் மற்றும் அவரது நலம் விரும்பிகள் பலமுறை அழைத்தும் வர மறுத்து விட்டாராம்.
அண்ணா நகரில் பிரபு தேவாவுக்கு சொந்தமாக வீடு உள்ளது. தரை தளத்தில் உள்ள வீடு பிரபுதேவா பெயரிலும் முதல் தள வீடு ரம்லத் பெயரிலும் உள்ளது. தரை தளம் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு மாடியில்தான் மனைவி குழந்தைகளுடன் வசித்தார்.
முதல் குழந்தை உடல் நலம் இல்லாமல் இருந்த போது ராஜா அண்ணாமலைபுரத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். அந்த குழந்தை இறந்த போது பிரபுதேவாவுக்கு ஆறுதல் சொல்ல அவ் வீட்டுக்கு நயன்தாரா வந்தார். அதன் பிறகு வாடகை வீட்டை காலி செய்து விட்டு அண்ணா நகரில் உள்ள சொந்த வீட்டுக்கு வந்தார்கள்.
ஆனால் தற்போது அவர் வீட்டுக்கு வந்து ஒரு மாதம் ஆகிறதாம். நயன்தாராவை திருமணம் செய்யப்போவதாக அறிவித்ததில் இருந்து வீட்டுக்கு போவதையும் நிறுத்தி விட்டாராம்.
ரம்லத் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. ரம்லத் நம்பரை பார்த்ததும் எடுக்க மறுக்கிறாராம். உறவினர்களை அவரிடம் தொடர்பு கொண்டு பேச வைத்து வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனாலும் வரவில்லை. இனி ரம்லத் வீட்டுக்கு வரும் எண்ணமில்லை என்று வெளிப்படையாகவே கூறிவிட்டாராம்.
உருமி படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. சந்தோஷ்சிவன் இயக்கும் இப்படத்தில் பிருதிவிராஜூம், பிரபு தேவாவும் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படப்பிடிப்பு முடிந்த பிறகும் கூட பிரபுதேவா வீட்டுக்கு வரவில்லை. நயன்தாராவுடன் ஆந்திராவில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளாராம்.
நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக அறிவித்ததை ரம்லத் கடுமையாக அறிக்கைகள் விட்டு கண்டிக்கவில்லை. போலீசில் புகார் அளிக்கவில்லை. போராட்டத்திலும் ஈடுபடவில்லை. ரம்லத்தின் இந்த மவுனத்தை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட பிரபுதேவா, இப்போது அவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment