
Saturday, October 16, 2010
சின்னத்திரையில் கஸ்தூரி!?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார் நடிகை கஸ்தூரி. ஆனால் அந்தப்படம் வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டதாலும், வேறு எந்த இயக்குநரும் புதிய வாய்ப்புகள் தரத் தயாராக இல்லாததாலும் இப்போது சின்னத் திரைப்பக்கம் ஒதுங்கிவிட்டார் அம்மணி.
பிரபல சின்னத்திரை இயக்குநர்கள் பலர் இவரை அணுகி கதைச் சொல்லி இருக்கிறார்களாம்.
ஆனாலும் உடனடியாக ஓகே சொல்லும் மூடில் இல்லையாம் கஸ்தூரி. இன்னும் சில தினங்கள் பொறுத்துப் பார்ப்போம்... அப்படியும் சினிமா வாய்ப்பு வராவிட்டால், சின்னத் திரைக்குப் போய்விடுவோம் என்று கூறி வருகிறாராம்.
குறிப்பிட்ட முன்னணி சேனல் ஒன்று சீரியலுக்கான நேரத்தை ஒதுக்கித் தந்த பிறகே சீரியல் ஆரம்பமாகும் என்கிறார்கள். அதுவரை வாய்ப்பு தேட டைம் இருக்கிறதல்லவா!
சும்மா இருந்தால் வருமா பெரிய திரை வாய்ப்பு? இதற்காக தனது புதிய படங்கள் அடங்கிய ஆல்பத்தை ஒரு கோடம்பாக்க மேனேஜர் மூலம் எல்லாருக்கும் கொடுத்தனுப்பி வருகிறாராம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment